» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கொலை முயற்சி, வழிப்பறி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

புதன் 13, ஆகஸ்ட் 2025 4:05:09 PM (IST)

நெல்லையில், வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல், திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம், பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பொன்னுமணி (28), சங்கர்நகர், ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்த ஆறுமுகம் மகன் உதய பிரகாஷ் (23) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி அறிக்கையின் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் 2பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2பேரும் பாளை., மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory