» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை: நிலுவைத் தொகை செலுத்த அழைப்பு
சனி 16, ஆகஸ்ட் 2025 12:45:43 PM (IST)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தாரர்களுக்கு வட்டித்தள்ளுபடி சலுகையை திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி வீட்டு பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுக தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தமிழக அரசாணை நிலை) எண்.116, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள்.04.08.2025 வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் ஆணையின்படி மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியினை முழுவதுமாக தள்ளுபடி செய்தும் வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் வட்டித்தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை எதிர்வரும் 31.03.2026-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆகவே திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட பாளை பகுதி | முதல் V. குலவணிகர்புரம் TNUDP .கீழநத்தம், நாரணம்மாள்புரம் பகுதி I,II, வி.எம். சத்திரம், வள்ளியூர், சுத்தமல்லி, ஆகிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் 31.03.2015-க்குள் தவணைக்காலம் முடிவுற்றும், இந்நாள்வரை நிலுவைத்தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, 31.03.2026-இதற்குள் நிலுவைத்தொகையை முழுவதையும் ஒரே தவணையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களும் திருநெல்வேலி வீட்டு வசதி பிரிவினை தொடர்பு கொண்டு உடனடியாக கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் திருநெல்வேலி வீட்டு வசதி செயற்பொறியாளர் இ.ஜான் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
