» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: காதலன் கைது

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:31:35 AM (IST)

சிவகிரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் பிரேம் குமார் (32), விவசாய தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளாக 25 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு இளம்பெண்ணும் பச்சைக்கொடி காட்டியதால் இருவரும் சேர்ந்து பல இடங்களில் ஊர் சுற்றியுள்ளனர்.

அப்போது இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இனிக்க இனிக்க பேசிய பிரேம் குமார் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண் கர்ப்பமடைந்தார். அப்போது தனது வயிற்றில் குழந்தை வளர்வதாகவும், தன்னை உடனே திருமணம் செய்துகொள்ளுமாறும் பிரேம்குமாரிடம் இளம்பெண் கெஞ்சியுள்ளார்.

ஆனால் இதைக்கேட்டு சற்றும் யோசிக்காத பிரேம்குமார், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறி கதறி அழுதார். இதையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து நடந்த விவரத்தை போலீசாரிடம் கூறி புகார் அளித்தனர்.

மேலும் தனது மகளை பிரேம் குமாரோடு சேர்த்து வாழ வைக்குமாறு முறையிட்டனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்மணி (பொறுப்பு), பிரேம் குமாரை காவல் நிலையத்துக்கு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பிரேம்குமார் தனது காதலியை திருமணம் செய்ய மீண்டும் மறுத்துவிட்டார். எனவே, இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரேம் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory