» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலில் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 8:36:53 AM (IST)

நெல்லை-சென்னை இடையே விரைவில் இயக்கப்படுவதற்காக 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு வந்தது.
நெல்லை- சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில் இதுவரை 16 பெட்டிகளுடன் இரு மார்க்கத்திலும் இயங்கி வருகிறது. எனவே, கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று இனிமேல் கூடுதலாக 4 பெட்டிகளையும் சேர்த்து மொத்தம் 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதற்காக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் கூடுதல் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்த பணிகள் முடிந்துவிட்ட நிலையில் பெரம்பூரில் இருந்து புதிதாக 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் நேற்று மதியம் 12.45 மணியளவில் நெல்லைக்கு வந்து சேர்ந்தது. இந்த பெட்டிகளில் பயணிகள் யாரும் ஏற்றப்படவில்லை.
இந்த புதிய பெட்டிகள், ரயிலின் முந்தைய திறனை விட அதிக பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கு வந்து சேர்ந்துள்ள இந்த புதிய ரயிலில், தேவையான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு விரைவில் நெல்லை-சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் 20 பெட்டிகளுடன் முழுமையாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூடுதல் ரயில் பெட்டிகள் மூலம் பயணிகளுக்கு மேலும் பல இருக்கைகளை உறுதி செய்வதுடன், தேவைப்படும் நேரத்தில் டிக்கெட்டுகள் கிடைப்பதையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் தற்போது பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
