» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி சாராள் டக்கர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 12:19:16 PM (IST)



திருநெல்வேலியில் 3 மாத சம்பள பாக்கியை தரக்கோரி சாராள் டக்கர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நுழைவாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "திருநெல்வேலியில் சாராள் டக்கர் கல்லூரி, சி.எஸ்.ஐ. டயோசிசனின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி மகளிர் கல்லூரி ஆகும். இங்கு சுமார் 3600 மாணவிகள் பயின்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மேனேஜ்மென்ட் விரிவுரையாளர்களும் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனர். 

கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் இல்லாமல் துயரப்பட்டு வருகிறோம். ஊதியம் கேட்டு பொறுப்பு முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் அளிக்கவில்லை. தற்போது எங்கள் மீது கருணை கூர்ந்து நெல்லை திருமண்டல பேராயர் (சேர்மன்) மற்றும் பொறுப்பு முதல்வர் ஒரு மாத சம்பளத்தை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யாரும் வங்கி கணக்கினை பயன்படுத்த முடியாதவாறு முடக்கிவிட்டனர். 

இதைக்குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர் கூறியதாவது, தங்கள் வங்கி கணக்கினை நிர்வகிக்கும் அதிகாரம் - முதல்வர் மற்றும் செயலாளர் இணைந்து கையொப்பமிட்டு செயல்படக் கூடியதாகும், ஆனால் தற்போது கல்லூரிக்கு செயலாளர் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் வங்கி மேலாளரிடம் எப்படி ஊதியம் அளிக்கலாம் எனக் கேட்டு வங்கி கணக்கினை முடக்கி வைத்ததாகவும் மேலாளர் மூலமாக தெரிந்து கொண்டோம்.

யார் வங்கி கணக்கினை முடக்கினார்கள் என்றும் எதற்காக செய்யப்பட்டது என்றும் நாங்கள் அறிந்து கொள்ள விழைகிறோம். மேலும் கல்லூரிக்கு செயலாளர் நியமனம் செய்து மாதந்தோறும் முறையாக ஊதியம் அளிக்க வேண்டடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory