» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த பாலியல் தாக்குதலில் அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, இன்று (9.9.2025) அவர்கள் 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தீரப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்சமயம் தூத்துக்குடி மாவட்டம்), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ேபருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)
