» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி வார்டன் உள்பட 2 பேர் கைது!!

திங்கள் 22, செப்டம்பர் 2025 8:22:32 AM (IST)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி வார்டன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் மாணவிகள் தங்கியிருந்து பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்கான தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இங்கு மேலப்பாளையம் வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்த அபூபக்கர் (46) என்பவர் காப்பாளராக (வார்டன்) பணிபுரிந்து வருகிறார். 

இவர் சம்பவத்தன்று அந்த விடுதியில் தங்கியுள்ள 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கு பணிபுரிந்து வரும் மற்றொரு காப்பாளர் தென்காசியை சேர்ந்த வகிதா என்ற வசந்தி (43) என்பவரிடம் தகவல் தெரிவித்தார். ஆனால் அவர் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவியிடம் மிரட்டும் வகையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

எனவே மாணவி வேறுவழியின்றி தன்னுடைய பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மனு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டர் கோமதி இதுதொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதன்பேரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அபூபக்கர், சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற வகிதா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து அபூபக்கர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், வகிதா கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory