» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாய்கடி மருந்துகள் தொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம்- நெல்லை ஆட்சியர் விளக்கம்!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 11:20:13 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நாய்கடிக்கு தேவையான மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு உள்ளது இதுகுறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 20.09.2025 அன்று இரவு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தெருவில் 8-க்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய் கடித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் நள்ளிரவு முதல் சிகிச்சைக்காக திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 8 நபர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் காயம்பட்ட இடத்தினை உரிய முறையில் சோப்பு போட்டு கழுவிடவும், பின்னர் நாய் கடித்தவர்களுக்கு தேவையான வெறிநாய்கடி தடுப்பூசி (Anti Rables Vaccine) மருந்து மற்றும் TD தடுப்பூசியூம் வழங்கப்பட்டது.
அவர்களில் சத்தியகனி (63 வயது) என்பவர் 3-ம் வகை வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து ஹானஸ்ட் (30 வயது), சுயம்பு (80 வயது), ராஜபாண்டி(64 வயது), முத்துராஜ் (18 வயது), கருணாகரன் (52 வயது) இவர்களும் மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டு உரிய முறையில் பரிந்துரை சீட்டு வழங்கி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். நாங்குநேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கடிக்கு மருந்து இல்லை என கூறிய செய்தி முற்றிலும் தவறானது.
திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மருந்து 69 குப்பிகள் (ARV) மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபின் மருந்து 5 குப்பிகள் (RIG) கையிருப்பு உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் தடையின்றி வெறிநாய்கடி மருந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1706 வெறிநாய் தடுப்பூசி மருந்து குப்பிகள்(ARV) மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபின் 55 குப்பிகள் (RIG) கையிருப்பு உள்ளது.
மாவட்டம் முழுவதும் போதிய அளவு வெறிநாய்கடி மருந்து எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வளர்ப்பு நாய், பூனை மற்றும் தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி தேவையான தடுப்பு மருந்துகளை 24 மணி நேரமும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, நாய்கடிக்கு தேவையான மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் போதுமான அளவு உள்ளது இதுகுறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
