» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

புதன் 24, செப்டம்பர் 2025 10:13:46 AM (IST)



கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 

பேரூராட்சி வார்டு 11முதல் 21 வரையிலானபகுதி மக்களுக்கு நடைபெற்ற இந்த சிறப்பு முகாமிற்குநகர பஞ்சாயத்து தலைவர் பார்வதி தலைமை தாங்கினார்.துணை தலைவர் இசக்கி பாண்டியன்,செயல் அலுவலர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி, குடிமை பொருள் தாசில்தார் பார்கவி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முகாமினில்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, குடியுரிமைப்பட்டா,சொத்துவரி மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 13 அரசுத்துறை சார்ந்த 43 சேவைகளுக்கு பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெற்றனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.கலந்து கொண்ட பயணாளிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் அன்பரசு, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜார்ஜ் ராபர்ட், பாண்டி, ஜானகி, பிரம்மாச்சி, பெரிய செல்வி, மாலதி, சு.ஜானகி, செய்யது அலி பாத்து, முத்துலட்சுமி அசன் பாத்திமா மற்றும் திமுக நிர்வாகிகள் அனிபா, ராம்குமார், ரசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory