» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு மலைமகளுக்கு 50ஆயிரம் விதைப் பந்துகளை அர்ப்பணித்த மாணவிகள்!

புதன் 24, செப்டம்பர் 2025 10:20:23 AM (IST)



வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த 50ஆயிரம் பந்துகளை மணிமுத்தாறு மலைமகளுக்கு அர்ப்பணித்தனர்... 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த ஒரு லட்சம் விதைப்பந்துகளில் பாதியான 50,000 பந்துகளை மணிமுத்தாறு மலைமகளுக்கு மாணவிகள் நேரடியாக அர்ப்பணித்தனர். மணிமுத்தாறு 9வது போலீஸ் பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உதவித்தளவாய் தீபா, துணைத் தளைவாய் ஸ்ரீதேவி மாணவிகளை மலையடிவாரத்தில் வழி நடத்தினர். 

சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் மேற்கொண்டுள்ள ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரிப்பு லட்சிய பயணத்தில் பங்கேற்ற மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பட்டாலியன் காவலர்களுக்கு சுந்தரபாண்டியபுரம் கோமதிநாயகம், ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் நற்சான்றிதழ்கள் வழங்கினர். பட்டாலியன் மைமூன் யாவரையும் வரவேற்றார். காவல்துறை அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பூத பாண்டியன், கண்ணன் ஏற்பாடுகளை கவனித்தனர். 

மரியா கல்லூரி செயலர் லாரன்ஸ் முதல்வர் சுஷ்மா, மேனேஜர் ரமேஷ் பட்டாலியனில் கௌரவம் செய்யப்பட்டனர். பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு மற்றும் காவல் துறையில் பெண்கள் அதிக அளவில் சேர விழிப்புணர்வு வழங்கினார். 

ஒரு விதைப்பந்தில் 5 விதைகள் என இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் விதைகள் மாணவிகளால் மணிமுத்தாறு மலையில் வீசப்பட்டது. மண் உருண்டைகளை வீசிட காவல்துறையினர் பெரிய அளவில் மாணவிகளுக்கு உதவினர். இந்தப் பயணம் மற்றும் சேவை வித்தியாசமான அனுபவமாக இருந்தது என மரியா கல்லூரி பேராசிரியர்கள் மணிமேகலை, சிவதாரணி, ஸ்டெல்லா மேரி மற்றும் பலர் தெரிவித்தனர் 46 லட்சம் விதைப்பந்துகளை எட்டி முடித்திருப்பதாக திருமாறன் தெரிவித்தார். 

போலீஸ் பட்டாலியன் செல்வ சாய், கீதா, சுபா, லாவண்யா, மாரியம்மாள், ராஜேஸ்வரி, விஜிலா, இந்துஜா, ரேவதி, கௌசல்யா, சகாய ஸ்டெபி பசுமை பணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லிடைக்குறிச்சி எழுத்தாளர் ராஜ் நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory