» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பட்டா பெயர் மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 24, செப்டம்பர் 2025 3:36:32 PM (IST)
கூடங்குளத்தில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த மனு குறித்து கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து வீட்டுமனை நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விஜயாவிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயா இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை விஜயாவிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட விஜயா நேற்று மதியம் கூடங்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலனை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
