» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)
நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகர ஆயுதப்படையில் முத்தரசி (43) என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி பாலகணேஷ் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். பாலகணேஷ், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் முத்தரசி தனது இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்தார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் துறையில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். கணவர் இறந்தது முதல் மிகுந்த சோகத்துடனே முத்தரசி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்தரசி நேற்று மதியம் ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்தபோது முத்தரசி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முத்தரசியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




