» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!

சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

திருநெல்வேலி நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 3ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகர்புற கோட்டம் செயற்பொறியாளர் (பொறுப்பு) ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தச்சநல்லூர் துணைமின் நிலையத்தில் வருகிற 3ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை: தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (3.11.2025, திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory