» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)

முன்னீர்பள்ளம் அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொங்கந்தான்பாறை பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வீரளபெருஞ்செல்வியை சேர்ந்த இசக்கிபாண்டி (23) என்ற தொழிலாளியை 3 பேர் கும்பல் சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இசக்கிபாண்டியை கொலை செய்ததாக பஞ்சாண்டி என்ற பேதுரு மணி (40), இன்பராஜ் என்ற எட்வர்ட் இன்பராஜ் (40), முத்துக்குமார் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 3 பேர் மீதான வழக்கு விசாரணை நெல்லை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாண்டி என்ற பேதுரு மணி, இன்பராஜ் என்ற எட்வர்ட் இன்பராஜ், முத்துக்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சூரசங்கரவேல் ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory