» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!

சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)



பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தமிழாசிரியர் மு. விசுவநாதன் தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் இராம. தீர்த்தராப்பன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் புலவர் நீ. அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தலைவர் பாப்பாக்குடி அ.முருகன் வரவேற்றார். இ. முருகேசன், விவேகானந்தா பாலர் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பேராசிரியர் பா. செந்தில் குமரன், முத்தமிழின் மாண்பு என்ற தலைப்பில் பேசினார். 

கல்வியில் சிறந்து விளங்கிய 8 மற்றும் 10ஆவது வகுப்பு மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் வி.ஏ.மாரிவண்ணமுத்து, ஊராட்சித் தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் பணியில் ஈடுபட்டு வரும் பாமணி, நாறும்பூநாதன், ச. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

விழாவில், அகஸ்தியர்பட்டி ஐ. லெட்சுமணன் எழுதிய மனமே எல்லாம் எனும் நூலை அம்பை தமிழ் இலக்கியப் பேரவையின் செயலர் ச. இலட்சுமணன் வெளியிட்டார். தமிழறிஞர் ந. சுப்பையா, சொ. முத்துசாமி, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கு.ம. சங்கரநாராயணன், நல்லாசிரியர் ச. மாடசாமி, உலகத் திருக்குறள் மைய மாவட்டத் தலைவர் வை. இராமசாமி, கல்லிடைக்குறிச்சி வாசகர் வட்டத் தலைவர் திருவருள் லத்திப், முக்கூடல் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ச. கோபாலகிருஷ்ணன், வீரவநல்லூர் வாசகர் வட்டத் தலைவர் பீ. ஆதம் இல்யாஸ், கலைப் பதிப்பக உரிமையாளர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த. சந்தனகுமார், த. ராஜேந்திரன், வீரை ஆ. ராஜேந்திரன் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியை சீதாராமன் தொகுத்து வழங்கினார். மு. செல்வகுமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory