» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபர் கைது

வெள்ளி 28, நவம்பர் 2025 8:38:33 AM (IST)



திருநெல்வேலி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளம் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பொன்னாங்குடி பாலம் அருகே முன்னீர் பள்ளம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ், உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம், எட்வின் அருண்ராஜ் மற்றும் காவலர்கள் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையின் போது வேகமாக வந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனம் ஓட்டி வந்த கொங்கத்தான் பாறை அதிபன் பாலாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருளான கணேஷ் புகையிலை, கூல் லிப், விமல் பான் மசாலா, v1 டோபாக்கோ ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் வெள்ளை முட்டையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்த போது மேலும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட பொருட்கள் சுமார் ஏறத்தாழ 500 கிலோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது பெரிய மூட்டை 43, சிறிய மூட்டை 8 மேலும் காவல்துறையின் விசாரணையில் மேலும் ஒருவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் என்பவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory