» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் 60 ஆண்டு கால ஆலமரத்தை வெட்ட முயற்சி : பாஜகவினர் முற்றுகையால் தடுக்கப்பட்டது!

சனி 7, பிப்ரவரி 2026 8:16:04 AM (IST)



தூத்துக்குடியில் 60 ஆண்டு கால பழமையான ஆலமரத்தை வெட்ட முயன்றதை பாஜகவினர் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம், பி & டி காலனி பகுதியில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று நேற்று மாநகராட்சி சார்பில் வெட்டப்பட இருந்தது. சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பழமையான மரத்தை வெட்டுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் - பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து பாஜகவினர் உடனடியாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் வழிகாட்டுதலில், பாஜகவினர் திரளாக சம்பவ இடத்தில் குவிந்தனர்.

மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்ட முயன்றபோது, அங்கு வந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்ட விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி பழமையான மரத்தை வெட்ட முயன்றது குறித்து பாஜக சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயல்பட்டு இயற்கை வளத்தைக் காத்த பாஜகவினரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மFeb 7, 2026 - 10:03:48 AM | Posted IP 162.1*****

மாநகராட்சி துட்டு பயலுக்கு அறிவு இருக்காது. காசுக்காக இயற்கையை அழிக்கவும் செய்வார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory