» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: வாலிபர் உயிரிழப்பு
புதன் 11, மார்ச் 2026 8:46:16 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையில் திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள க.சாயர்புரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் கணேஷ் குமார் (27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு, கணேஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரவு சுமார் 11 மணியளவில் தேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் தும்பு ஆலை அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மாட்டின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணேஷ் குமார், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த கணேஷ் குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தந்தை தனராஜ் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)


BabuMar 12, 2026 - 08:36:55 PM | Posted IP 162.1*****