» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு தடை: அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
சனி 21, மார்ச் 2026 11:26:43 AM (IST)
தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு முட்டுக் கட்டையாக உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய 'தேர்தல் பயணக் கலந்துரையாடல்' விவாதம் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்றது. இதில் திமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், அதிமுக சார்பில் வழக்கறிஞர் சேகர் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.விவாதத்தில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி தொகுதியில் ₹784 கோடி மதிப்பில் சாலைகள், கால்வாய்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், திமுக ஆட்சியில் முடுக்கிவிடப்பட்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு வெறும் 200 கோடி மட்டும் ஒதுக்கிய நிலையில், திமுக அரசு கூடுதல் நிதியுடன் 500 கோடி செலவில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.
மேம்பாலப் பணிகள் தாமதம் ஏன்?
வி.வி.டி மேம்பாலப் பணி நீதிமன்ற வழக்கால் தாமதமாகிறது. இதற்கு மாற்றாக 4-வது கேட் பகுதியில் மேம்பாலமும், இதர பகுதிகளில் நடைபாதைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திமுக அரசு அறிவித்த 505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மீதமுள்ள 37 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு முட்டுக் கட்டையாக உள்ளது. தமிழக நலனுக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் குரல் கொடுக்கவோ அல்லது போராடவோ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வருவதில்லை என அமைச்சர் சாடினார்.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, டைடல் பார்க் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆன்மிக ரீதியாக 4,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதுடன், திருச்செந்தூர் கோயில் மேம்பாட்டுப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
விவாத மேடைகளில் பங்கேற்கப் பல அரசியல் தலைவர்கள் தயங்கிய நிலையில், துணிச்சலுடன் பங்கேற்று அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமளித்த அமைச்சர் கீதா ஜீவனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)


ஆமாSep 4, 1774 - 06:30:00 AM | Posted IP 162.1*****