» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு குடியிருப்பில் திமுக தேர்தல் அலுவலகம்? தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவால் சீல் வைப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 10:21:46 AM (IST)
கடையநல்லூர் நகராட்சி பொறியாளர் குடியிருப்பை திமுகவினர் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பார்வையாளரின் உத்தரவின் பேரில் அந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் நடத்தை விதிகளைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் வெளிமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குத் தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ் தேர்தல் கண்காணிப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றாலம் அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள அவரைச் சந்தித்த தேசியக் கட்சி ஒன்றின் மாவட்ட நிர்வாகி, பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.
புகார் விவரம்:
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:"கடையநல்லூர் தீயணைப்புத் துறை அலுவலகம் அருகே அமைந்துள்ள நகராட்சி பொறியாளர் குடியிருப்பை, நகரமன்றத் தலைவர் தலைமையிலான திமுகவினர் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் அங்குத் தேர்தல் களப் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, விதிகளை மீறிச் செயல்பாடுகள் நடைபெறுகின்றன."
புகாரைப் பெற்றுக்கொண்ட தேர்தல் பார்வையாளர் தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தத் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் புகார் தொடர்பாக முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நகராட்சி பொறியாளர் குடியிருப்புக்குத் தேர்தல் அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர்.
அரசு அலுவலகக் குடியிருப்புக்குத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த இந்தச் சம்பவம் கடையநல்லூர் தொகுதி மட்டுமின்றி, தென்காசி மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பாரபட்சமற்ற நடவடிக்கை பொதுமக்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)



Mary. SMar 23, 2026 - 12:49:52 PM | Posted IP 162.1*****