» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)

தற்போது தமிழகத்தில் நடைபெறவிருப்பது ஒரு போர். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க அதில் நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
மறைந்த மாபெரும் பொதுவுடைமைத் தலைவர் ஆர். நல்லகண்ணு படத்திறப்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றி பேசுகையில், "ஐயா நல்லகண்ணு அவர்களின் எளிமை, நேர்மை மற்றும் சமரசமற்ற போராட்ட குணம் ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கும், பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் ஒரு பாடமாகும். தகைசால் தமிழர் விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாயை அரசுக்கே திருப்பி அளித்த மாபெரும் மனிதர் அவர். அவரின் கொள்கைப்பிடிப்பை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் நடைபெறவிருப்பது பாசிசத்திற்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும் இடையிலான ஒரு போர். தமிழக உரிமைகளை மீட்டெடுக்க இந்தத் தேர்தலில் நாம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியைக் காக்கவும், வரும் தேர்தலில் தூத்துக்குடி உட்பட அனைத்துத் தொகுதிகளிலும் நமது கூட்டணி மகத்தான வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைச் செயற்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் ஏற்புரை வழங்கினார். விழாவில் நல்லகண்ணு குடும்பத்தினர், முன்னாள் எம்.எல்.ஏ டேனியல் ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, சமக, தவாக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

அரசு குடியிருப்பில் திமுக தேர்தல் அலுவலகம்? தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவால் சீல் வைப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 10:21:46 AM (IST)


HumanMar 23, 2026 - 08:56:43 PM | Posted IP 104.2*****