» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!
திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெற்றிக்காக வேண்டி வழிபாடு நடத்தும் அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளதால், அரசியல் கட்சியினர் பலர் தங்களுக்கு சீட் வேண்டி விருப்ப மனு அளித்துள்ளனர்.
விருப்ப மனு அளித்தவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர். கூட்டம் இல்லாத நேரங்களில் சத்தமில்லாமல் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், முருகன் சூரனை சம்ஹாரம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால், குரு அருளால் வெற்றி பெற வேண்டி அரசியல் பிரமுகர்கள் தங்களது விருப்ப மனுக்கள் மற்றும் வேட்பு மனுக்களுடன் வந்து பூைஜ செய்கின்றனர்.
சிலர் எதிரிகளை வீழ்த்த 'சத்ரு சம்ஹார யாகம்' நடத்தியும் வழிபாடு செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டமும், மற்ற நாட்களில் அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால் கோயில் வளாகம் களைகட்டியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வழிநெடுகிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 26-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 23, மார்ச் 2026 10:36:36 AM (IST)

அரசு குடியிருப்பில் திமுக தேர்தல் அலுவலகம்? தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவால் சீல் வைப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 10:21:46 AM (IST)

