» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரபரணி ஆற்று மணலில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 4:45:06 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது.
வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், தாமிரபரணி ஆற்று மணலில் தத்ரூபமான விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓவியர் கோபி அவர்களால் செதுக்கப்பட்ட இந்த மணல் சிற்பம், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. விழிப்புணர்வு ஓவியத்தை மிகச்சிறப்பாக அமைத்த ஓவியர் கோபியை, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பாராட்டி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கொங்கராயகுறிச்சி மகளிர் குழுவினர் திரளாகக் கலந்துகொண்டு, தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி "100 சதவீதம் வாக்களிப்போம்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீண்ட மனிதச் சங்கிலி அமைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அஹ்மது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் தங்கசாமி முன்னிலை வகித்தார். கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் தனுஷ்கோடி, கிராம உதயம் தொண்டு நிறுவன துணை இயக்குனர் புகழேந்தி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டு, ஜனநாயகக் கடமையாற்றுவதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் துரை, கிராம நிர்வாக அலுவலர்கள் இம்மானுவேல், பலவேசம், கந்தசுப்பு மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கிராம உதயம் பகுதி அலுவலர் ஆனந்த் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:51:20 PM (IST)

அரசு சட்டக் கல்லூரியில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 1400 மாணவர்கள் பங்கேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 1:01:30 PM (IST)

நகைக் கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:37:25 AM (IST)

ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

