» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)
ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் உட்பட 3 போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி மற்றும் பனைத் தொழிலாளியான மணிகண்டன் (35) என்பவரது தோட்டத்தில், கள் விற்பனை புகாரைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஆத்திரமடைந்த இசக்கிராஜா, தனது கைத்துப்பாக்கியால் மணிகண்டனைச் சுட்டார். இதில் மணிகண்டனின் கால்களில் இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவைப் பணி இடைநீக்கம் (Suspension) செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பாதிக்கப்பட்ட மணிகண்டன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆலங்குளம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா உட்பட மூன்று போலீசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவர்கள் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை முயற்சி பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாகக் காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

