» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குமரியில் ஏப்ரல் 12-ல் விஜய் தேர்தல் பிரச்சாரம்: தவெக தொண்டர்கள் உற்சாகம்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:29:22 PM (IST)

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தவெக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களை அறிமுகம் செய்து வைத்து, வாக்கு சேகரிப்பதற்காக அன்று மாலை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் விஜய், தனது கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் மற்றும் தொகுதி மேம்பாட்டிற்கான திட்டங்கள் குறித்துப் பேசவுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தவெக நிர்வாகிகள் முறைப்படி விண்ணப்பித்துள்ளனர்.
கட்சியின் தலைவராக விஜய் முதன்முறையாகத் தேர்தல் களத்தில் நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:51:20 PM (IST)

அரசு சட்டக் கல்லூரியில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 1400 மாணவர்கள் பங்கேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 1:01:30 PM (IST)

நகைக் கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:37:25 AM (IST)

ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)

