» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!

திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

அதிமுக தலைவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டனர். ஆனால், தமிழர்களை எப்போதும் நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது என்பதை பாஜக அறியும் என்று ராகுல் காந்தி  கூறினார். 

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: "மத்தியில் ஆளும் பாஜக அரசு, வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் மாநில அரசுகளை டெல்லியில் இருந்து ஆதிக்கம் செய்ய நினைக்கிறது. தமிழர்களை எப்போதும் நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது என்பதை பாஜக அறியும். அதனால்தான், அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தமிழகத்தில் கால்பதிக்க அவர்கள் முயல்கிறார்கள். 

அதிமுக தலைவர்கள் பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் திராவிடச் சித்தாந்தத்தை வெறுக்கிறது. ஆனால், தமிழர்கள் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்-யிடம் சரணடைய மாட்டார்கள்.

"தமிழர்களின் அரசியல் வரலாறு என்பது எப்போதும் சமூக நீதியை முன்னிறுத்தியது. மதிய உணவுத் திட்டம், மகளிர் நலத்திட்டங்கள் என அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் தமிழ்நாடு இன்று இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக பெரும் சதி செய்து வருகிறது. 

வெறுப்பை விதைத்து மக்களைப் பிளவுபடுத்தி அதில் குளிர்காய்வதே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் முக்கிய வேலை. தமிழகத்தின் கல்விப் பணிகளுக்கு வித்திட்ட காமராஜரைத் தான் எப்போதும் நினைவு கூர்வதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, கூட்டணி ஆட்சி தொடரும்போது மக்கள் நலத்திட்டங்களும் தொடரும் என உறுதியளித்தார்.

அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக நிரப்பப்படும்.     தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்தியா என்பது மனிதநேயம் மற்றும் ஒற்றுமை உணர்வால் நிறைந்த நாடு. அந்த ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் பாஜகவின் திட்டத்தை மக்கள் முறியடிக்க வேண்டும் என ராகுல் காந்தி தனது உரையில் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory