» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.14¾ லட்சம் மோசடி – கேரள வாலிபர் கைது!!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:27:12 AM (IST)
ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை என ஆசை வார்த்தை கூறி, நெல்லையைச் சேர்ந்த மருத்துவரிடம் சுமார் 14.71 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரள வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (24). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், பிரபல நிறுவனத்தின் மனிதவள மேலாளர் என அறிமுகம் செய்து கொண்ட மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே சில ஆன்லைன் பணிகளைச் செய்வதன் மூலம் தினமும் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் சில படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பிய கிஷோருக்கு, கைமேல் பலன் கிடைப்பது போலச் சில தொகைகளை அவரது வங்கிக் கணக்கில் மர்ம நபர் வரவு வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய கிஷோரை, டெலிகிராம் செயலியில் ஒரு கணக்கைத் தொடங்க வைத்து, அதில் அதிக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பி, டாக்டர் கிஷோர் தனது மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.14,71,000 வரை பல்வேறு தவணைகளாகச் செலுத்தியுள்ளார். பெருமளவு பணத்தைச் செலுத்திய பிறகு, கிஷோரால் ரூ.12,000 மட்டுமே திரும்ப எடுக்க முடிந்தது. மீதமுள்ள பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த அகில் கிருஷ்ணா (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார், அகில் கிருஷ்ணாவைக் கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். ஆன்லைன் மூலம் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

