» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடிபோதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்: ஓட்டுநர் உரிமம் ரத்து
ஞாயிறு 10, மே 2026 10:50:47 PM (IST)

குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட மூன்று தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மீது தலா ரூ.15000 அபராதம் விதித்து, ஓட்டுநர் உரிமத்தையும் போக்குவரத்து காவல் துறையினர் ரத்து செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எஸ்.பி. மதன், டி.எஸ்.பி. சுனில் ஆகியோர் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் மூன்று ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட மூன்று ஆம்னி பேருந்துகளையும் மாற்று ஓட்டுநர்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., மேற்படி ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.
தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளிடையேயும், பொதுமக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்ற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)

அங்கன்வாடி வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: பெண் கைது - இளம்பெண் தற்கொலை முயற்சி!
வெள்ளி 8, மே 2026 8:22:20 AM (IST)

பழைய குற்றாலத்தில் ரூ.20 நுழைவு கட்டணம் : காலை 7 முதல் மாலை 5 வரை மட்டுமே அனுமதி!
வியாழன் 7, மே 2026 10:35:05 AM (IST)



ராஜாமே 11, 2026 - 07:59:44 AM | Posted IP 104.2*****