» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோஷ்டி மோதல்: யூடியூபர் ஜி.பி.முத்து உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு!

திங்கள் 11, மே 2026 8:54:13 AM (IST)

உடன்குடியில் முள்செடி அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட இருதரப்பைச் சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பரதர் தெருவைச் சேர்ந்த நகை தொழிலாளி சுடலையாண்டி (44), தனது மகளை டியூஷன் சென்டருக்கு அழைத்துச் சென்றபோது, பாதையோரம் இருந்த முள்செடி அவர் மகளின் கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. அந்த முள்செடி ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பு வளர்க்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுடலையாண்டி, அந்த முள்செடியை அகற்றியுள்ளார்.

மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற சுடலையாண்டியிடம், "எங்கள் வீட்டு முள்செடியை எப்படி அகற்றலாம்?" எனக் கேட்டு ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தந்தை கணேசன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் குறித்து சுடலையாண்டி மற்றும் ஜி.பி.முத்து தரப்பில் தனித்தனியாகக் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், யூடியூபர் ஜி.பி.முத்து உட்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இருதரப்பினரும் தெருவில் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

Babuமே 11, 2026 - 10:07:12 AM | Posted IP 104.2*****

Ivan Yellam pirabala youtubera velangum padichavan nattuku ulachavan Yellam ipo pirabalam kidayathu pola

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory