» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)
நெல்லையில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனாரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். பெற்றோர் இல்லாததால் அவர் தனது அண்ணனின் பராமரிப்பில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது அண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த இளம்பெண் அழுதுகொண்டே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளார்.
விசாரணையில், அண்ணன் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்தப் பெண்ணின் அண்ணன் உடனடியாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பேட்டை திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (34) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் இவர், திட்டமிட்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து இசக்கிதுரையை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)


