» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் கோவிலில் மனிதாபிமானமற்ற செயல்: கர்ப்பிணிப் பெண்ணை வெளியே தள்ளிய ஊழியர்கள்!

சனி 16, மே 2026 11:56:09 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தரிசனம் செய்ய வந்த கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அவரை வெளியே தள்ளி ஊழியர்கள்கேட்டைப் பூட்டியதாக புகார் எழுந்துள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்காகத் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். நேற்று அதிகாலை நேரத்தில், தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர்.

அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த கோவில் ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் மனிதாபிமானமற்ற முறையில் அவர்களை வெளியே தள்ளி, முகத்திற்கு நேரே கேட்டைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். 

பாதிக்கப்பட்ட தம்பதியினர் கூறுகையில், "கோவிலில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்த விஐபி கலாசாரம் மற்றும் கட்டணக் கொள்ளை போன்ற அவலப் பிரச்சினைகளுக்குத் தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏழை எளிய மக்களும், பெண்களும் நிம்மதியாகச் சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விதிகளை அமல்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலில் விஐபிக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சாமானிய பக்தர்கள் வெயிலிலும் கூட்ட நெரிசலிலும் வதங்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இவற்றுடன், அர்ச்சகர்களின் அதீத கட்டண வசூலும், ஊழியர்களின் மனிதாபிமானமற்ற அநாகரிகமான பொது மக்கள் அணுகுமுறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து

Babuமே 16, 2026 - 10:37:00 PM | Posted IP 172.7*****

tasmacla extra vanguran yella kovilayum spl tharisanam n kollai adikuran govt off la kasu lanjam vanguran ithu yellam vellaikaran attchi kalathula idayathu ipo than

சங்கரன்மே 16, 2026 - 02:12:22 PM | Posted IP 104.2*****

அனிதா கன்ட்ரோல்ல இருக்கா? விஜய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory