» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை - மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:33:56 AM (IST)
நாசரேத் காவல் நிலையம் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பாஸ்கர் (37) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் இருவருமே ஒன்றாக வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் நாசரேத் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதை தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.
ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் உச்சக்கட்ட கோபமடைந்த பாஸ்கர், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாஸ்கர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய பாஸ்கரை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத் காவல் நிலையம் அருகிலேயே குடிபோதையில் கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)



தமிழன்மே 30, 2026 - 08:43:12 AM | Posted IP 172.7*****