» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் உங்களுக்கு ஏன் பதற்றம்? அனிதாவிற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
சனி 30, மே 2026 3:25:44 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடு செய்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது? என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணனின் கண்டன அறிக்கை: திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயிலில் புதியதாகப் பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திடீர் ஆய்வு என்ற பெயரில் காலம் காலமாக பக்தர்களுக்குச் சேவை செய்து வரும் பாரம்பரியமிக்க திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
இவர்கள் பல நூற்றாண்டுகளாக மரபு வழியாகப் பக்தர்களுக்குச் சுவாமி தரிசன உதவியைச் செய்து வருகின்றனர். அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதோடு கோயிலின் புகழைக் கெடுத்த அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
"சாதிப் பெயர் போடும் வழக்கம் எனக்கு இல்லை" - அமைச்சர் ரமேஷ் பதிலடி:
அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பதாவது: "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடையாது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் எங்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை; அப்படிச் செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் சொல்லவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு எதற்காகத் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்று தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகளை விரைவில் வெளிக்கொணர்வேன். அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
Siva Sriமே 30, 2026 - 04:46:26 PM | Posted IP 172.7*****
என் அப்பன் வடிவேலன் பார்த்து கொள்வார்.குற்றம் புரிபவர்களை எப்படி திருத்துவது.மீண்டும் ஏழைகளின் பணம் சுரண்டப்படவேண்டுமா.இடி விழும் சண்முகா விரைவில் காட்டிக்கொடுப்பாய்.
Siva Sriமே 30, 2026 - 04:46:22 PM | Posted IP 172.7*****
என் அப்பன் வடிவேலன் பார்த்து கொள்வார்.குற்றம் புரிபவர்களை எப்படி திருத்துவது.மீண்டும் ஏழைகளின் பணம் சுரண்டப்படவேண்டுமா.இடி விழும் சண்முகா விரைவில் காட்டிக்கொடுப்பாய்.
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)



தமிழன்மே 30, 2026 - 07:53:52 PM | Posted IP 104.2*****