» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - 6 பைக்கள் பறிமுதல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:27:56 PM (IST)
நெல்லை அருகே தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ் காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித் (30), மகாராஜன் (56) உள்ளிட்ட 6 பேர் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீஸார் நடத்திய சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (19) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. மேலும், இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)


