» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை தலைமை தாங்கிப் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டன. முக்கியக் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இன்றைய தினம் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட வருவாய் அலுவலர், அவற்றை விரைவாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
கூட்டத்தின் தொடர்ச்சியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை குறைபாடுடைய 5 மாணவ, மாணவியர்களுக்கு எழுத்துக்களைப் பெரியதாகக் காட்ட உதவும் பிரத்யேகக் கருவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை வழங்கினார். இந்நிதான நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)


