» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு

புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

SorimuthaianCollector.jpg

சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், , இன்று (12.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, ஆடி அமாவாசையான இன்று கோவில் வளாகம், பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடில்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்விளக்கு வசதிகள், மருத்துவ வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இன்றையதினம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி செலுத்த வரும் பக்தர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, சுடப்படாத மண்பாண்டங்களில் மட்டுமே அஸ்தியைக் கரைக்கப்படுவது குறித்தும், தாமிரபரணி ஆற்றில் துணிகள், பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பொருட்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஆற்றின் தூய்மையை பாதுகாக்க காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது போன்ற பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவத்துறை, தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory