» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையாக, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் கோட்ட வருவாய்த்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் வாலிபால் போட்டியினைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக அவரது தலைமையில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இப்போட்டிகள் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 14 வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளன. அண்ணா விளையாட்டரங்கத்தில், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, சிலம்பம், 100மீ, 400மீ, 800மீ ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், பிரான்சிஸ் பொறியியல் கல்லூரி (உள்விளையாட்டரங்கம்): செஸ், கேரம், டேபிள் டென்னிஸ் மற்றும் த்ரோபால் போட்டிகளும் நடைபெறும்.
மாணவர்களிடையே போதைப் பழக்கத்தைக் குறைத்து, விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இத்தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் மோ. பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரி ராஜா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)


