» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)
தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து, பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி மாந்திரீகவாதிகள் 2 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (54) மற்றும் ஆய்க்குடி அருகே உள்ள விந்தன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் (47) ஆகிய இருவரும் நண்பர்கள். தங்களுக்கு மாந்திரீகம் தெரியும் எனக் கூறி இவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி பகுதிக்குச் சென்ற இவர்கள், அங்கு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம், "உங்கள் வீட்டில் விலைமதிப்பற்ற புதையல் மற்றும் பொருட்கள் உள்ளன. சிறப்பு மாந்திரீக பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்தால் அவை கிடைக்கும்" என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இவர்களின் பேச்சை உண்மை என நம்பிய அந்தப் பெண், 'கூகுள் பே' மற்றும் ரொக்கமாக எனச் சுமார் ரூ.1.54 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும் அப்பெண்ணின் வீட்டில் பல மாந்திரீக பூஜைகளைச் செய்துள்ளனர்.
ஆனால், நீண்ட நாட்களாகியும் புதையல் கிடைக்காததால் சந்தேகமடைந்த அப்பெண், இதுகுறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர்கள், "பூஜைகள் நடைபெற்று வருகின்றன; இதை பாதியில் நிறுத்தினால் உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என மிரட்டியுள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், தனது குடும்பத்தினரிடம் விவரத்தைக் கூறித் தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார், வேல்முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)

நீச்சல் பயிற்சி அளிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:43:48 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)


