» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை வி.கே. புரத்தில் ரூ.29.51 கோடியில் குடிநீர் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 4:42:56 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29.51 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காணொலி காட்சி வாயிலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, பாபநாசம் நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் குத்துவிளக்கேற்றினார்.
பின்னர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் விநியோக அமைப்பு உள்ளிட்ட திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திட்டத்தின் செயல்பாடு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் எதிர்கால மக்கள் தொகை உயர்வைக் கருத்தில் கொண்டு, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் (LPCD) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
21 வார்டுகளைக் கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான விக்கிரமசிங்கபுரத்தில் (மக்கள் தொகை சுமார் 48,399), இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் மொத்தம் 25,000 வீடுகளுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் உள்கட்டமைப்புகள் தற்போதைய மக்கள் தொகை மற்றும் நகர வளர்ச்சிக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோக அமைப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மண்டல நிர்வாக இயக்குநர் நவேந்திரன், மண்டல செயற்பொறியாளர் சனல்குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் மகாதேவன், நகராட்சித் தலைவர் செல்வசுரேஷ், நகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


