» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, ஸ்கூட்டரில் சென்ற இளைஞரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தஞ்சை காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி வண்ணார்பேட்டை பகுதியில் திமுகவினர் இன்று சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் ஒருவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
சாலையில் தனியாக வந்த இளைஞரை திமுகவினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
PoolithikAug 4, 2026 - 09:16:41 PM | Posted IP 172.7*****
போராட்டம் என்பது ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும் அப்படிப்பட்ட போராட்டத்திற்கு இடையிலே இடையூறாக வந்தார்களா அல்லது மகிழ்ச்சியாக சென்றார்களா என்பது குறித்து முறையாக ஆய்வு செய்து அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செல்ல வலியுறுத்தி இருக்கலாம் அதை விடுத்து தாக்குவது என்பது சரியானதாக இருக்காது ஏனென்றால் ஒரு தலைவரின் கவிதை கண்டித்து நடக்கின்ற போராட்டத்தில் சம்பந்தம் இன்றி இன்னொருவர் பாதிக்கப்படக்கூடாது என்பது எனது கருத்து இது வேறு விதமான விளைவுகளை அந்த மக்கள் பார்வையில் தோன்றக்கூடும்
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)



ஓட்டு போட்ட முட்டாள்Aug 4, 2026 - 10:54:00 PM | Posted IP 172.7*****