» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
திசையன்விளை மற்றும் நாங்குநேரி வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளநீர்க் கால்வாய் தோண்டும் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 2022-2023 ஆம் ஆண்டுகளில் இறுதி தீர்ப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டன. உரிமையை நிலைநாட்டும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நில உரிமையாளர்களின் இழப்பீட்டுத் தொகை வருவாய் வைப்பீடாக (Revenue Deposit) வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இரண்டு ஆண்டுகள் கடந்தும் தொகை பெறாத உரிமையாளர்களுக்கு உடனடியாக நிதி வழங்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகங்களில் காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாட்கள் & கிராமங்கள்:
ஆகஸ்ட் 04, 2026: திசையன்விளை வட்டம் – விஜயநாராயணம் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3)
ஆகஸ்ட் 05, 2026: நாங்குநேரி வட்டம் – சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி
ஆகஸ்ட் 06, 2026: நாங்குநேரி வட்டம் – காடன்குளம் திருமலாபுரம்
ஆகஸ்ட் 11, 2026: திசையன்விளை வட்டம் – உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கோவன்குளம், கோட்டைகருங்குளம்
ஆகஸ்ட் 13, 2026: திசையன்விளை வட்டம் – குமாரபுரம், திசையன்விளை
ஆகஸ்ட் 18, 2026: திசையன்விளை வட்டம் – இட்டமொழி, இராமகிருஷ்ணாபுரம்
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
நில உரிமையாளர்கள் பின்வரும் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் நேரில் ஆஜராக வேண்டும்:
கிரையப் பத்திரம் & மூலப் பத்திரம்
தற்போதைய 10(1) கணினி பட்டா
வாரிசுதாரர்கள் எனில்: இறப்புச் சான்றிதழ் & வாரிசுச் சான்றிதழ்
01.01.1975 முதல் தற்போது வரையிலான வில்லங்கச் சான்றிதழ் (EC)
நில உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


