» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)
சாலை விபத்தில் உயிரிழந்த லோடுமேனின் குடும்பத்தினருக்கு ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை 1-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (மோட்டார் விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம்) MCOP எண் 1152/2023 மற்றும் MCOP எண் 1223/2023 ஆகிய மனுக்கள் விசாரணைக்கு வந்தன.சாலை விபத்தில் உயிரிழந்த லோடுமேன் மணிமாறனின் மனைவி ஜெயலட்சுமி, சிறுமகள் அங்கலேஸ்வரி, குடும்ப உறுப்பினர்களான பஞ்சவர்ணம் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் சார்பில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குடும்பத்தின் முக்கிய ஆதராவாக இருந்த மணிமாறன் உயிரிழந்ததால் தாங்கள் பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. விபத்தில் தொடர்புடைய டிப்பர் லாரியின் (TN 20 CY 5629) உரிமையாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் இணைந்து மனுதாரர்களுக்கு ரூ.66,26,000 இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும், மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை செலுத்தும் நாள் வரை ஆண்டுக்கு 7.5% வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அ. செல்வராஜ் ஆஜராகி வாதாடினார்.
இழப்பீட்டுத் தொகை பகிர்வு:
நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீட்டுத் தொகை பின்வருமாறு பிரித்து வழங்கப்படுகிறது:
ஜெயலட்சுமி (மனைவி): ரூ.22,26,000
அங்கலேஸ்வரி (மகள்): ரூ.22,00,000
பஞ்சவர்ணம்: ரூ.11,00,000
கிருஷ்ணசாமி: ரூ.11,00,000
சிறுமி அங்கலேஸ்வரிக்கான தொகையை அவர் 18 வயது (முழுவயது) அடையும் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக (FD) செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து வரும் வட்டித் தொகையை நீதிமன்ற நிபந்தனைகளின்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு நபருக்கு ரூ.95,000 இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


