» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)
ஆலங்குளத்தில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ், காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் அரி நாராயணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அரி நாராயணன் (55). காங்கிரஸ் பிரமுகரான இவர், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகப் பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் இவருடைய கூட்டுறவு சங்கத்தில் இளம் பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு அரி நாராயணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரி நாராயணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)


