» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரிலுள்ள ப்ளோரன்ஸ் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2026 நடைபெற உள்ளது.
அரசுப் பொருட்காட்சியில், 27 அரசு துறை அரங்கங்களும், அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த 5 அரங்குகள் என 32 அரங்குகள் அமையவுள்ளது. துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் போன்ற திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் துறை கண்காட்சி அரங்குகளை அமைத்திட வேண்டும்.
ஒவ்வொரு துறை அலுவலர்களும் தனி அலுவலரை நியமனம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக பொருட்காட்சி துவக்க நாள் முதல் நிறைவு நாள் வரை பொருட்காட்சி முன்பு மாநகர பேருந்துகள் நின்று செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சார்பில் பொருட்காட்சிக்கு தேவையான குடிநீர் வசதி, தூய்மை பணிகள், தினமும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்புத்துறை சார்பில் ஒரு தீயணைப்பு வாகனம், சுகாதாரத்துறையின் சார்பில் தேவையான மருத்துவ வசதிகளுடன் மருத்துக்குழுவினை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பொருட்காட்சி 2026 சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம.கயிலைச்செல்வம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.ச.மகாகிருஷ்ணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)


