» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மாற்றம் : ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம்!

வியாழன் 2, ஜூலை 2026 8:35:28 AM (IST)

தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ம.பிரபு இடமாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிமைப்பணி துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள முக்கிய அதிகாரிகளைப் பணியிடமாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்கள் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் கே.எஸ்.பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இவ்வரசாணையின்படி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ம.பிரபு இடமாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணியிடத்தில் இருந்த வே.கல்யாண குமார் வயது முதிர்வின் காரணமாகப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ம.பிரபுவை டாஸ்மாக் மதுரை (தெற்கு) மாவட்ட மேலாளராக நியமித்து ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டிருந்த முந்தைய ஆணை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து

கந்தன்Jul 2, 2026 - 10:27:40 AM | Posted IP 104.2*****

சில தனியார் பேருந்துகளில் சில மினி பேருந்துகளில் பயணச்சீட்டு வாகன எண் பஸ் சர்வீஸ் பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் நேரம் தொலைதூரம் பயணிகள் எண்ணிக்கை கட்டண விபரம் இன்றி மோசடியாக கட்டணத்தொகை பயணசிட்டு அளித்து கணக்கில காட்டாத தொழிலாக நடைபெறுகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory