» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிராக்டர் மோதி விபத்து: வாலிபர் பரிதாப மரணம்!
வியாழன் 2, ஜூலை 2026 4:28:06 PM (IST)
பழையகாயலில் டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த வாலிபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் சுதர்சன் (18). இவர் கடந்த ஜூன் 29-ஆம் தேதி காலை பழைய காயல் பகுதியிலிருந்து தனது சொந்த ஊரான கணேஷ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக சுதர்சன் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுதர்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)



கிப்சன்Jul 2, 2026 - 09:51:08 PM | Posted IP 162.1*****