» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வீட்டில் கல்வீச்சு : தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார்!

சனி 4, ஜூலை 2026 10:51:01 AM (IST)

POliceINverstperumal.jpg

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிதம்பரநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ஐஎன்டியுசி மாநில தலைவர் பி.கதிர்வேல். இவருடைய மகன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி. நேற்று (ஜூலை 3) இரவு சுமார் 10.40 மணி அளவில், பெருமாள்சாமி வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் திடீரெனக் கல் எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பொருட்கள் எதுவும் சேதமடையவில்லை.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 4) காலை 9.45 மணி அளவில் மாவட்டத் தலைவர் பெருமாள்சாமி தனது கட்சித் தொண்டர்களுடன் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு நேரில் சென்றார். அங்குப் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் தரண்யாவிடம் புகார் மனு அளித்தார். அந்தப் புகாரில், தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுச் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டுத் தனித்தனியாக இரண்டு மனுக்களை அவர் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாய் கூசும் விதத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குப் பெருமாள்சாமி சென்றார். 

அங்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்துப் புகார் மனுவை அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர், இப்புகார் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 4, 2026 - 12:05:36 PM | Posted IP 172.7*****

கல் எறிந்தவன் திமுக ஆளாக இருக்கலாம். கலவர பயலுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory