» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆணவக்கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம்: பசும்பொன் மக்கள் தேசம் கட்சி வலியுறுத்தல்

புதன் 15, ஜூலை 2026 10:20:33 AM (IST)



"ஆணவக் கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம்" என்று  ஆணவக் கொலைகள் தடுப்பு ஆணைய அலுவலகத் தலைவரிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னையில் உள்ள ஆணவக்கொலைகள் தடுப்பு ஆணைய அலுவலகத்தில், அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாட்ஷாவைப் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கிராஜா நேரில் சந்தித்து 507 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

அதில், "ஆணவக்கொலைகளுக்கான தனிச்சட்டம் வேண்டாம்" என்ற தலைப்பில் 470 பக்கங்கள் கொண்ட முதன்மை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணவக்கொலைகளுக்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படுவதால் பெண்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைத் தரவுகளுடன் விளக்கும் 37 பக்கத் துணை அறிக்கையும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களின் திருமணத் தேர்வு உரிமை மதிக்கப்பட வேண்டிய அதே வேளையில், போலித் திருமண வாக்குறுதி, கர்ப்பமாக்கி கைவிடுதல், வற்புறுத்தல் மற்றும் தனியுரிமை மிரட்டல்கள் ஆகியவை பெண்கள் மீதான கடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டுச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் மாநிலச் செயலாளர் வளிக்கண்ணு, வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, பாக்யராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

டேய்Jul 16, 2026 - 09:40:30 PM | Posted IP 162.1*****

ஆட்டோ பேட்டரி திருடா.. உங்களை உள்ள வச்சு சுளுக்கு எடுக்க தான் இந்த சட்டம். புரிஞ்சுதா..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory