» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)
நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் இன்று முதல் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே செய்திக் குறிப்பில் "பயணிகளின் தேவையை முன்னிட்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. இக்கூடுதல் பெட்டி இணைப்பின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 72 பயணிகள் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் கால அட்டவணை:
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்: நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 30, 2026 வரை இக்கூடுதல் படுக்கை வசதிப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.
கோவை - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்: மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலில் இந்த கூடுதல் பெட்டி இணைப்பு நடைமுறை ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை தொடரும் எனத் தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)


