» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

நெல்லை செங்குளத்தில் கட்டப்பட்டு வரும் நெல்லை கேன்சர் மருத்துவமனை நிர்மாணப் பணிகளுக்காக, டிஎம்பி அறக்கட்டளை சார்பில் 3-வது தவணையாக ரூ.1 கோடிக்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.
‘உதவும் உள்ளங்கள்’ அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் பகுதியில் "நெல்லை கேன்சர் மருத்துவமனை" புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகளுக்காக டிஎம்பி அறக்கட்டளை சார்பாக மொத்தம் ரூ.3.34 கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக, கடந்த நிதியாண்டில் ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது.:
அதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சாலி எஸ். நாயர் 3-வது தவணையாக ரூ.1 கோடிக்கான காசோலையை ‘உதவும் உள்ளங்கள்’ அறக்கட்டளையின் அறங்காவலர் சங்கரமகாதேவனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி முத்தையா உடனிருந்தார்.
இது குறித்து டிஎம்பி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்: "திருநெல்வேலியில் அமையவிருக்கும் இந்த நவீனப் புற்றுநோய் மருத்துவமனை மூலம், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், இதர சிகிச்சைகளின் வெற்றி விகிதமும் உயர்ந்து, தென் தமிழகப் பகுதி மக்களின் ஆரோக்கியமும் வாழ்க்கைத் தரமும் கணிசமாக மேம்படப் பெரும் வாய்ப்பாக இது அமையும்" எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)


